2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுச்சுற்றில் ரோமேனியாவின் நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹெலப்பை எதிர்த்து எஸ்தோனியாவின் அன்னெட் கொண்டாவிட் விளையாடினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்திய ஹெலப் 6-1, 6-1 என்ற நேர்செட்கணக்குகளில் கொண்டாவிட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதனையடுத்து நடைபெற்ற மற்றொரு காலிறுதிச்சுற்றில் ஸ்பெயின் நாட்டின் கார்ப்ஸ் முகுருசா, ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லியுசென்கோவாவை (Anastasia Pavlyuchenkova) எதிர்த்து விளையாடினார்.