யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் ஜுவான் இக்னாசியோ லண்டரோவை எதிர்கொண்டார்.
#USOpen2019: மூன்றாம் சுற்றுக்கு தகுதிபெற்றார் ஜோகோவிச்! - யூ.எஸ்.ஓபன்
உலகின் முன்னணி நட்சத்திர வீரரான நோவாக் ஜோகோவிச் 6-4, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜுவான் இக்னாசியோ லண்டரோவை (Juan Ignacio Londero) வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
![#USOpen2019: மூன்றாம் சுற்றுக்கு தகுதிபெற்றார் ஜோகோவிச்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4274153-1063-4274153-1567049384336.jpg)
முதலில் தனது இயல்பான அட்டத்தின் மூலம் ஜோகோவிச் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிகணக்கில் லண்ட்ரோவிடமிருந்து கைப்பற்றினார். அதன் பின் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது செட் கணக்கை யார் வெல்வார்கள் என்ற அளவிற்கு இருவரும் சமநிலையில் போட்டியிட்டனர். பின்னர் ஜோகோவிச் 7-6 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார்.
அதன் பின் மூன்றாவது செட் புள்ளியையும் ஜோகோவிச் 6-1 என எளிதில் லண்டரொவிடமிருந்து கைப்பற்றினார். இறுதியில் நோவாக் ஜோகோவிச் 6-4, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜுவான் இக்னாசியோ லண்டரோவை வீழ்த்தி யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.