கரோனா வைரஸ் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் டென்னிஸ் விளையாட்டின் பிரபலமான தொடர்களான விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் போன்ற முக்கிய தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.
"ஏடிபி சுயநலத்துடன் செயல்படுகிறது"- நிக் கிர்ஜியோஸ்! - சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு
அமெரிக்க நாட்டின் கரோனா வைரஸ் நிலைமை மற்றும் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக அமைதியின்மை இருக்கும் சமயத்தில், யுஎஸ் ஓபன் தொடரை நடத்த ஏடிபி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நிக் கிர்ஜியோஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரராக வலம்வரும் நிக் கிர்ஜியோஸ், ஏடிபியின் இந்த முடிவிற்கு கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'கரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேலும் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்தின் காரணமாக அங்கே இனவெறிக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இச்சூழலில், ஏடிபி யுஎஸ் ஓபன் 2020யை நடத்த திட்டமிட்டுள்ளது அவர்களின் சுயநலத்தை எடுத்துக்காட்டுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.