தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'தி டான்' விருதுபெற்ற நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை - Ashley barty wins the don award

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டிக்கு ஆஸ்திரேலியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'தி டான்' விருது வழங்கப்பட்டுள்ளது.

Ashley barty

By

Published : Oct 11, 2019, 4:55 PM IST

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். முன்னதாக பிரஞ்ச் ஓபனில் கடந்த 1973ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கெரட் கோர்ட் இப்பட்டத்தை கைப்பற்றியிருந்தார். அவருக்குப்பின் 46 வருடங்கள் கழித்து அந்த சாதனையை ஆஷ்லி பார்ட்டி படைத்தார்.

ஆஷ்லி பார்ட்டி

தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ள ஆஷ்லி, சமீபத்தில் நடைபெற்ற சீன ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறியிருந்தார்.

இந்நிலையில் ஆஷ்லி பார்ட்டியை கௌரவிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவில் விளையாட்டு வீரர்களுக்காக அளிக்கப்படும் உயரிய விருதான தி டான் விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பாட் ராஃபடர் இந்த விருதை பெற்றதே கடைசியாக டென்னிஸ் வீரர் பெற்றது ஆகும்.

1998 ஆம் ஆண்டு முதல் டான் பிராட்மேன் நினைவாக வழங்கப்படும் இந்த விருது ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெற்றதில் மகிழ்ச்சியடைவதாக ஆஷ்லி பார்dடி தெரிவித்திருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details