தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#chinaopen: காலிறுதியில் பரம எதிரி குவிட்டோவை எதிர்கொள்ளும் ஆஷ்லி பார்ட்டி ! - china open 2019

சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் யூலியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆஷ்லி

By

Published : Oct 3, 2019, 3:01 AM IST

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பெய்ஜிங்கில் தற்போது நடைபெற்றுவருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நான்காவது சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து கஷக் வீராங்கனை யூலியா ஆடினார்.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து அபாரமாக ஆடிய ஆஷ்லி பார்ட்டி, முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்ற, இரண்டாவது செட்டை டை - ப்ரேக்கர் முறையில் யூலியா 6-7 எனக் கைப்பற்றியதால், மூன்றாவது செட் ஆட்டம் சூடு பிடித்தது.

மூன்றாவது செட் ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ஆஷ்லி பார்ட்டியை சமாளிக்க முடியாமல் யூலியா திணறினார். இறுதியாக ஆஷ்லி பார்ட்டி 6-2 என மூன்றாவது செட்டைக் கைப்பற்றி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதிச் சுற்றில் ஆஷ்லி பார்ட்டியின் பரம எதிரியாக கருதப்படும் பெட்ரா குவிட்டோவாவை எதிர்த்து ஆடவுள்ளார். இந்த ஆண்டில் நான்காவது முறையாக இருவரும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: மணமகள் ஆகிறார் சானியா மிர்சாவின் தங்கை! மாப்பிள்ளை யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details