சீனாவின் ஹுபெய் நகரில் மகளிர்களுக்கான வுகான் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி, குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக்குடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை பார்டி 7-6 என்ற கணக்கில் டை பிரேக்கர் முறையில் வென்றார். பின்னர், இரண்டாவது செட்டில் 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் போட்டி நடைபெற்றது.