தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டென்னிஸ்: கிகி பெர்டன்ஸை வீழ்த்தி சாம்பியனான சபலெங்கா!

ஹூஹாய்: டபிள்யூ.டி.ஏ மகளிர் எலைட் டிராபிக்கான இறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனை கிகி பெர்டன்ஸை வீழ்த்தி பெலாரஸ் வீராங்கனை சபலெங்கா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Aryna Sabalenka beat Kiki Bertens in WTA Elite Trophy

By

Published : Oct 27, 2019, 6:44 PM IST

டபிள்யூ.டி.ஏ மகளிர் எலைட் டிராபிக்கான டென்னிஸ் தொடர் சீனாவின் ஹுஹாய்-ல் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனை டச்சு வீராங்கனை கிகி பெர்டன்ஸை எதிர்த்து 21 வயதேயான பெலாரஸ் வீராங்கனை சபலெங்கா மோதினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தின் முதல் செட்டை அதிரடியாக ஆடிய சபலெங்கா 6-4 என கைப்பற்றியதால் ஆட்டம் பரபரப்பானது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் கிகி கை ஓங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சபலெங்கா தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார், இவரது ஆட்டத்திற்கு முன்னால் கிகி-யால் ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டாவது செட்டை 6-2 என சபலெங்கா கைப்பற்றி டபிள்யூ.டி.ஏ வுமன்ஸ் எலைட் டிராபியைக் கைப்பற்றினார்.

இந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மூன்று தொடர்களில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சபலெங்கா அசத்தியுள்ளார். இந்த வெற்றி குறித்து பேசுகையில், ''புதிதாக எனது வீட்டில் ஒரு அறையை நான் வாங்கும் கோப்பைகளை வைப்பதற்காகவே ஒதுக்க வேண்டும் என நினைக்கிறேன். உலகின் பத்தாம் இடத்தில் இருக்கும் கிகி பெர்டன்ஸை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

கிகி பெர்டன்ஸ் - சபலெங்கா

இதையும் படிங்க: உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழர்

ABOUT THE AUTHOR

...view details