தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரிட்டீஷ் பிரீமியர் லீக் : வெற்றியுடன் தொடங்கிய முர்ரே! - கொலோன் ஓபன்

லண்டன் : பிரிட்டீஷ் பிரீமியர் லீக் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஆண்டி முர்ரே வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

Andy Murray grabs his first win in two months
Andy Murray grabs his first win in two months

By

Published : Dec 21, 2020, 3:32 PM IST

2021ஆம் அண்டில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் இங்கிலாந்து வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் லான் டென்னிஸ் கூட்டமைப்பு நான்கு நாள் டென்னிஸ் போட்டியைத் தொடங்கியுள்ளது. பிரிட்டீஸ் பிரிமியர் லீக் டென்னிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் இங்கிலாந்தின் அனைத்து டென்னிஸ் வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதில் கடந்த அக்டோபர் மாதம் ஜெர்மன் நாட்டில் நடைபெற்ற கொலோன் ஓபன் டென்னிஸ் தொடரின்போது காயமடைந்த நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரே, காயத்திலிருந்து மீண்டு இத்தொடரில் பங்கேற்றார்.

முர்ரே அசத்தல்

இதில் இன்று (டிச.21) நடைபெற்ற ஆட்டத்தில் ஆண்டி முர்ரே - டான் எவன்ஸை எதிர்கொண்டார். பரபரப்பாக இப்போட்டியில் ஆண்டி முர்ரே 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டான் எவன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்த ஆண்டி முர்ரே, தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க:ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித்தை நெருங்கிய கோலி, சறுக்கிய புஜாரா, ரஹானே!

ABOUT THE AUTHOR

...view details