''என்னால் சுவாசிக்க முடியவில்லை ப்ளீஸ், என்னைக் கொன்று விடாதீர்கள்'' அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் கடைக்கு வந்த ஒருவரின் கடைசி வார்த்தைகள் இவை. ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலால் அழுத்தி அமெரிக்க காவல்துறையினர் கொலை செய்தனர்.
இதனால் அமெரிக்கா முழுவதும் ''நோ ஜஸ்டிஸ், நோ பீஸ்'' என்ற முழக்கங்கள் எழுந்துள்ளது. ஜார்ஜுக்கு நீதி கேட்டு நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கறுப்பின மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்ஜ் ஃப்ளாய்டிற்கு ஆதரவளிக்கும் வகையில் இளம் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து டிக் டோக் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோகோ காஃப், ''இனவெறிக்கு எதிராக போராடுவதற்கு எனது குரலைப் பயன்படுத்துகிறேன். ஜார்ஜ் ஃப்ளாய்ட், ஆர்பெரே, ப்ரியன்னா டெய்லர், ட்ரவியோன் மார்டின், கார்னர் இந்த வரிசையில் எண்ணற்றவர்கள்... இவர்களுக்கு அடுத்து நான் தானா? நான் எனது குரலைப் பயன்படுத்துகிறேன். உங்களால் முடியுமா?'' எனக் கேள்வி எழுப்பி போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.
இதையும் படிங்க:குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் சேவாக்!