மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக இருந்தவர் டுவைன் பிராவோ. இவர் இதுவரை 90 டி20 போட்டிகளில் விளையாடி 1245 ரன்கள் குவித்து 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச அரங்கில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ரன்களும், 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2968 ரன்களும், 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது 38 வயதான டுவைன் பிராவோ நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுடன் நாளை (நவம்பர் 6) மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் போட்டியே பிராவோவின் கடைசி சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்!