தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

T20 WORLDCUP: ஐபிஎல் தொடரால் தப்பித்தேன் - வில்லியம்சன் வெளிப்படை - அரையிறுதியில் நியூசிலாந்து அணி

ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப்போட்டிகளில் பங்கேற்றதால்தான் உலகக்கோப்பைத் தொடரின் சூழலைப் புரிந்துகொண்டு சிறப்பாக செயல்பட முடிந்தது என நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Kane Williamson, கேன் வில்லியம்சன், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், new zealand captain Kane Williamson
T20 WORLDCUP

By

Published : Nov 9, 2021, 8:29 PM IST

துபாய்: ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் - 12 சுற்றுகள் நேற்றுடன் (நவ. 8) நிறைவடைந்தன. முதல் பிரிவில் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளும், இரண்டாம் பிரிவி்ல் இருந்து பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில், முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் நாளை (நவ. 10) மோதுகின்றன.

அதிர்ஷ்டம் எங்கள் பக்கம்

இந்நிலையில், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கூறிய அவர்," உலகக்கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது ஆசிய அணிகளுக்கே சாதகம் என நினைத்தேன். ஆனால், ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப்போட்டிகளில் விளையாடியது எனக்கு உலகக்கோப்பையில் கைகொடுத்தது எனக் கூறலாம்.

ஐபிஎல் போட்டி பல நாட்டு வீரர்கள் குறித்த அறிதலை உருவாக்கியது. இங்கிருக்கும் ஆடுகளங்களின் இயல்பு குறித்தும் நிறைய அறிந்தகொள்ள முடிந்தது. எங்கள் வெற்றிக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், அதிர்ஷ்டமும் இருந்தது என்றுதான் கூறவேண்டும்.

பகை தீர்க்குமா கறுப்புப்படை?

இந்தத் தொடரின் ஆரம்பம் முதல் எந்த அணி வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் வீழ்த்தும் என நாங்கள் எதிர்பார்த்தோம். நல்வாய்ப்பாக, சூப்பர் - 12 சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளோம்" என்றார்.

கடந்த 2016 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இயான் தலைமையிலான இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

தற்போதும் இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியுடனே நியூசிலாந்து அரையிறுதியில் மோத உள்ளதால், கடந்த கால தோல்விக்கு இப்போட்டியில் பழிதீர்க்கும் முனைப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடர் முக்கியமல்ல - கபில்தேவ் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details