சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பாக தூர்தர்ஷனில் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு யோகா பயிற்சியை ராம்தேவ் கற்றுக்கொடுக்கவுள்ளார்.
சிறந்த யோகா வீடியோவிற்கு ரூ.1 லட்சம் பரிசு - மத்திய ஆயுஷ் அமைச்சகம் - ஸ்ரீபாத் நாயக்
சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், தாங்கள் செய்யும் யோகாசனங்களை வீடியோவாக எடுத்து பதிவு செய்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
yoga-blogger-to-get-prize-of-rs-one-lakh-says-ayush-minister-shripad-naik
இந்த நிகழ்ச்சி பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி ஆயுஷ் அமைச்சகத்தின் சமூகவலைதளப் பக்கத்தில் நேரலையாக காலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.
இதுகுறித்து ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் பேசுகையில், ''பல்வேறு விதமான யோகாசனங்களை தங்களது வீடுகளில் செய்து வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். மக்களிடையே யோகாவை அன்றாட வாழ்க்கை முறையில் இணைப்பதற்கு இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன'' என்றார்.