ஐஎஸ்எஸ்எஃப் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் தனிநபர் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில், இந்திய வீராங்கனை யசஷ்வினி சிங் தேஸ்வால் பங்கேற்றார்.
#ISSFWorldCup: இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது தங்கம்! - உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர்
ரியோ டி ஜெனிரோ: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை யசஷ்வினி சிங் தேஸ்வால் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இவர், 236.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை பெற்றார். இவரைத் தொடர்ந்து உலகின் முதல் நிலை வீரராங்கனையும், உக்ரைன் நாட்டு வீராங்கனையுமான ஒலினா காஸ்டீவிச் (Olena Kostevych) 234.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், செர்பியாவின் ஜஸ்மினா மிலாவோனிக் 215.7 புள்ளிகளுடன் வெண்கல பதக்கமும் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன்மூலம் யசஷ்வினி அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். முன்னதாக, இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், வீரர் அபிஷேக் வர்மா ஆகியோர் தங்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தகது.