உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளும் தங்களது வாழ்த்துகளை இணையதளம் வழியாகத் தெரிவித்து வருகின்றனர்.
”ஹேப்பி இண்டிபெண்டென்ஸ் டே இந்தியா” என சொன்ன குத்துச்சண்டை பிரபலங்கள்! - indian independence day
73-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகப் பொழுதுபோக்கு குத்துச்சண்டை(WWE) வீரர்கள் தங்களது வாழ்த்துகளை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதில் குறிப்பாக உலக பொழுதுபோக்கு குத்துச்சண்டை(WWE) அமைப்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலியை பதிவிட்டுள்ளது. அந்த காணொலியில் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், குத்துச்சண்டை நட்சத்திரங்கள் பலர் சுதந்திர தின வாழ்த்துளை தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவில் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர்களான ஜான் சீனா, ரோமன் ரெய்ன்ஸ், செத் ரொலின்ஸ், கவிதா தேவி போன்றவர்கள் இடம்பெற்று, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அவர்களின் வாழ்த்து செய்தி காணொலி, இந்திய ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.