இந்தாண்டுக்கான மல்யுத்த உலகக்கோப்பை தொடர்கள் செர்பியாவின் பெல்கிரேட் நகரில் நடைபெற்றுவந்தது. இத்தொடரின் இறுதி நாளான நேற்று ஆடவர் 74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் 2019ஆம் ஆண்டும் யு-23 பிரிவின் உலகச் சாம்பியனான ரஷ்யாவின் ரசம்பேக் ஜமலோவ், உலகக்கோப்பை தொடரில் இருமுறைசாம்பியன் பட்டம் வென்ற இத்தாலியின் ஃபிராங்க் சாமிசோவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் ரஷ்யாவின் ரசம்பேக் ஜமலோவ் 4-2 என்ற புள்ளிக்கணக்கில் ஃபிராங்க் சமிசோவை வீழ்த்தி, 74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
இதன்மூலம் மல்யுத்த உலகக்கோப்பை ஃப்ரீஸ்டைல் பிரிவில் ரஷ்யா நான்கு தங்கப்பதங்களை வென்று அசத்தியது. முன்னதாக 57 கிலோ பிரிவில் ஜாவூர் உகேவ்வும், 92 கிலோ பிரிவில் அலிகான் ஜாப்ரிலோவ்வும், 125 கிலோ பிரிவில் ஷாமில் ஷரிபோவ் ஆகிய ரஷ்ய வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான மைதானங்கள் அறிவிப்பு!