தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 2 பதக்கம்! ஆடவர் குழு போட்டியிலும் அசத்தும் இந்திய வீரர்கள்! - ஆசிய விளையாட்டு 2023

Asian Games: ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க பட்டியல் 94ஐ கடந்தது. ஆண்கள் மற்றும் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர்.

Asian Games
Asian Games

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 5:19 PM IST

Updated : Oct 6, 2023, 6:34 PM IST

ஹாங்சோ :ஆசிய விளையாட்டு தொடரின் மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை கிரன் பிஷ்னாய் மற்றும் அமன் ஷெராவத் ஆகியோர் வெண்கலம் வென்றனர். 19வது ஆசிய விளையாட்டு போட்டி, சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில், இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க அறுவடை நடத்தி வருகின்றனர்.

ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில், இந்திய வீரர் அமன் ஷெராவத், சீனாவின் லியு மிங்குவை 11-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதேபோல் மகளிருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கிரன் பிஷ்னாய், மங்கோலியாவின் கன்பத் அருண்ஜர்கலை 6-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

அதேபோல் ஆடவருக்கான பிரிட்ஜ் குழு விளையாட்டில், இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய அணியில், ஜக்கி சிவதசானி, ராஜேஸ்வர் திவாரி, சந்தீப் தக்ரல், ராஜூ தொலானி, அஜய் கரே, சுமித் முகர்ஜி ஆகியோர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் பதக்கம் வென்ற அதிக வயதான குழு இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வயது என்பது வெறும் நம்பர் என நிரூபணம் ஆகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் ஒட்டு மொத்த பதக்க பட்டியலில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 94ஐ கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :ஆசிய விளையாட்டில் இந்தியா பதக்க அறுவடை! எந்ததெந்த விளையாட்டுல என்னென்ன பதக்கம் தெரியுமா?

Last Updated : Oct 6, 2023, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details