தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரோம் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத்! - ரோம் ரேங்கிங் மல்யுத்த தொடர் 2020

இத்தாலியில் நடைபெறும் ரோம் ரேங்கிங் மல்யுத்தத் தொடரின் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Wrestler Vinesh Phogat clinches gold at Rome Ranking Series event
Wrestler Vinesh Phogat clinches gold at Rome Ranking Series event

By

Published : Jan 18, 2020, 6:22 PM IST

இத்தாலி தலைநகர் ரோமில் ரோம் ரேங்கிங் மல்யுத்தத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் மல்யுத்தத் தொடர் இதுவாகும். இத்தொடரின் மகளிர் 53 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி சீனாவின் குயான்யு, லியோ, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெரிஜா ஆகியோரை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அவர் ஈகுவேடாரின் லூசியா எலிசெபெத்துடன் மோதினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 4-0 என்ற கணக்கில் லூசியா எலிசெபெத்தை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். இதேபோல் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷூ மாலிக் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஆடவர் 82 கிலோ கிரேக்கோ ரோமன் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் குர்ப்ரீத் சிங் 8-5 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கியின் புர்ஹான் அக்புதக்கை (Burhan Akbudak) வீழ்த்தி தங்கம் வென்றார்.

குர்ப்ரீத் சிங்

இதையும் படிங்க:இந்தியாவின் டேவிட் பெக்காம்!

ABOUT THE AUTHOR

...view details