உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மும்பையில் நடைபெற்றது. இதில் 14, 16, 18 வயது பிரிவுகளுக்கு என ஆடவர், மகளிர் என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதில் 18 வயது ஓபன் பிரிவில் இந்தியாவின் 14 வயது கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞாநந்தா கலந்துகொண்டார்.
இந்த போட்டியின் 11ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞாநந்தாவை எதிர்த்து ஜெர்மனியின் வேலண்டின் பக்குல்ஸ் ஆடினார். இந்த ஆட்டத்தில் 9 புள்ளிகளுடன் பிரக்ஞாநந்தா ஆட்டத்தை டிரா செய்ய, மற்றொரு வீரரான அர்ஜூன் கல்யாணுடனான போட்டியில் அர்மேனியாவின் ஷாந்த் சர்ஜிஸ்யானுடன் டிரா செய்தார். இதனால் இந்தியாவின் பிரக்ஞாநந்தா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.