உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள கடந்த பிப்.24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று (பிப்.27) நான்காவது நாளாக ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
இந்தத் தாக்குதலால் இருநாட்டு தரப்பிலும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளன. தாக்குதலை உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனப் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யா மீது பல தடைகளையும் உலக நாடுகள் விதித்து வருகின்றன.