தோகா: கலிபா இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நேற்று (டிச.1) நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் வீரர் அல்வோரா மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.
முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது. தொடர் ஆட்டத்தில் 48 ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர் ரிட்சு டோன் தனது அணிக்கான முதல் கோலை அடித்து போட்டியை சமன் பெற செய்தார். சக அணி வீரர் ஆவ் டனாகா இரண்டாவது கோலை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.