அமெரிக்காவின் ஓரிகான் மகானத்தில் உள்ள யூஜின் நகரில் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நிறைவடைந்தது. 10 நாள்கள் நடைபெற்ற இத்தொடரில் மொத்தம் 44 நாடுகள் பங்கேற்ற நிலையில், 48 பதக்கப்போட்டிகள் நடைபெற்றன.
இதில், தொடரை நடத்தும் அமெரிக்கா 13 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப்பிடித்தது. மேலும், 13 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 33 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளது.
எத்தியோப்பியா 4 தங்கம், ஜமைக்கா 2 தங்கம், 7 வெள்ளி முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்தன. கென்யா இரண்டு தங்கம் வென்றிருந்தாலும், 5 வெள்ளியை மட்டுமே பெற்றதால் நான்காவது இடத்தைப் பிடித்தது. தொடர்ந்து, நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றதால், 1 பதக்கத்துடன் இந்தியா 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னதாக, இந்தியா சார்பில் முதல்முறையாக 2003ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் அஞ்சு பாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதல் மகளிர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். அதன்பின்னர், நீரஜ் தற்போது வெள்ளி வென்றுள்ளார்.
இதையும் படிங்க:அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் - நீரஜ் சோப்ரா உறுதி