லோசான்:இந்தியாவைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், சர்வதேச அளவில் நட்சத்திர வீராங்கனையாக ஜொலித்தார். அவர் 2016ஆம் ஆண்டு இளம் பெண்களுக்கான பயிற்சி மையத்தைத் தொடங்கினார்.
இந்த மையத்திலிருந்து பயிற்சிபெற்றவர்கள் சர்வதேச அளவுகளில் 20 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் பல்வேறு விருதுகளைக் குவித்தனர். மேலும், இந்திய தடகள கூட்டமைப்பில் பாலின சமத்துவத்திற்குத் தொடர் குரல் கொடுத்துவந்த அஞ்சு, பின் நாள்களில் அந்த அமைப்பின் மூத்தத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாம்சன்-ஹேராவுக்கு விருது
அதன்பின்னர், பல்வேறு பள்ளி மாணவர்களின் விளையாட்டு எதிர்காலங்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சியில் அவரின் முயற்சியைப் பாராட்டும்விதமாக உலக தடகள அமைப்பு 'ஆண்டின் சிறந்த பெண்' என்ற விருதை அஞ்சுவிற்கு அறிவித்துள்ளது.
மேலும், ஒலிம்பிக் சாம்பியன்களான ஜமைக்காவின் எலைன் தாம்சன்-ஹேரா, நார்வே நாட்டு வீராங்கனை கார்ஸ்டன் வார்ஹோம் ஆகியோருக்கு 'ஆண்டின் உலக தடகள வீரர்கள்' விருதை உலக தடகள நிறுவனம் அளித்துள்ளது. உலக தடகள விருதுகள் 2021 நிகழ்ச்சி நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: U20 CHAMPIONSHIP: 1 செ.மீட்டரில் மிஸ்ஸானது தங்கம்; கண்ணீர் விட்ட ஷைலி சிங்!