இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தாய்லாந்தின் ஜித்போங் ஜுதாமஸ்ஸை எதிர்கொண்டார்.
இதில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்திய நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம், சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்லும் 5ஆவது வீராங்கனை என்ற பெருமையை நிகாத் ஜரீன் பெற்றுள்ளார்.