தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

5 கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு நோட்டீஸ்! - ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு

டெல்லி: தாங்கள் இருக்கும் இடத்தை வெளியிடத் தவறியதாக ஐந்து கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல விளையாட்டு வீரர்களுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அலுவலர் அகர்வால்
ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அலுவலர் அகர்வால்

By

Published : Jun 13, 2020, 9:53 PM IST

வீரர்கள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து (பிசிசிஐ) வரும் பதிலை மதிப்பீடு செய்தவுடன், இந்தச் செயல், தவறுகள் பட்டியலில் எடுக்கப்படுமா என்பது குறித்த முடிவு செய்யப்படும் என்று ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இருக்கும் இடம் குறித்து தகவல் அளிக்காத வீரர்களின் செயல்பாடு குற்றமாகக் கருதப்படும் பட்சத்தில், இதுபோன்று மூன்று முறை தவறு இழைக்கும் வீரர்களுக்கு விசாரணையின் பின்னர் இரண்டு வருட இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அலுவலர் அகர்வால் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும், இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் இருப்பதால், தற்சமயம் வசிக்கும் இடத்தைத் தெரிவிக்க வேண்டியதில்லை என்று அவர்கள் நினைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details