செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேட்டில் நடந்த 13வது உலக கராத்தே போட்டியில் 18 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் உள்பட இந்தியா சார்பாக 8 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மாணவ, மாணவிகள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி,ஒரு வெண்கலம் ஆகிய நான்கு பதக்கங்களை வென்றுள்ளனர். இன்று நாடு திரும்பிய அவர்களுக்கு சென்னை விமானநிலையத்தில் உறவினர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.