பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்று சாதனை படைத்தார்.
தங்க மங்கைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! - ilavenil
சென்னை: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்காக தங்கம் வென்ற தமிழ்நாட்டின் இளவேனில் வாலறிவனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

valarivan
தற்போது நாடு திரும்பிய இளவேனில், சென்னை விமான நிலையத்திற்கு வந்ததும் அவரது பெற்றொர்கள் மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டபோது
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இளவேனில், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், என்னை ஆதரித்த தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரை அவரது வெளிநாட்டு பயணம் முடிந்து வந்த பின்பு சந்திக்க உள்ளதாகவும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Last Updated : Sep 4, 2019, 9:01 AM IST