இந்திய மகளிர் பளுதூக்குதல் வீராங்கனை சீமா, இந்தாண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 35ஆவது தேசிய மகளிர் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் சீமாவின் உடலில் தடைசெய்யப்பட்ட பொருட்களான ஹைட்ராக்சி-4-டெமாக்சிபென், மெட்டினோலோன், ஸ்டீராய்ட் ஆஸ்டரைன் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவையனைத்தும் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பால் தடை செய்யப்பட்ட பொருட்களாகும்.
ஊக்கமருந்து புகார்: காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை - Weight lifter seema gets four year ban
ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற பளுதூக்குதல் வீராங்கனை சீமாவுக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
![ஊக்கமருந்து புகார்: காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை Weight lifter seema, பளுதூக்குதல் வீராங்கனை சீமா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5520536-thumbnail-3x2-seema.jpg)
Weight lifter seema, பளுதூக்குதல் வீராங்கனை சீமா
இது குறித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீமா ஊக்கமருந்தை பயன்படுத்தி தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் விதிமுறைகளை மீறியுள்ளார். இதனால் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீமா, கடந்த 2017ஆம் ஆண்டு காமென்வெல்த் சாம்பியன்சிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Dec 28, 2019, 5:21 PM IST