மும்பையில் நடைபெற்ற உயர் செயல்திறன் விளையாட்டு திட்ட விழாவில் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ பேசுகையில், “இந்தியர் அனைவரும் பதக்கம் வெல்வதையும், முடிவுகளை (வெற்றி) பெறுவதிலும், கொண்டாட்டத்தையும் விரும்புகிறோம். ஆனால் அதற்கான எந்தவொரு தேசிய அளவிலான கூட்டு முயற்சியும் நம்மிடம் இல்லை. இது வெற்றிக்கான முடிவுகளை எளிதில் மாற்றிவிடும். காரணம் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கங்களின் எண்ணிக்கையை பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.
ஏனெனில் இந்தியா போன்ற ஒரு மிகப்பெரும் நாட்டிற்கு இது மகிழ்ச்சியான செய்தியல்ல. இதற்கான காரணம் நம்மிடம் விளையாட்டு கலாசாரம் என்பதே இல்லை” என்றார்.