ஃபார்முலா ஒன் கார் பந்தயம் வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக இந்தப் பந்தயம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் ஆண்டின் முடிவில் ஃபார்முலா ஒன் வீரர்களுக்கான புள்ளிப்பட்டியலில், 347 புள்ளிகளுடன் ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள லூயிஸ் ஹேமில்டன் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்துவருகிறார்.
மேலும் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் அதிக பட்டங்களை வென்ற மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையையும் லூயிஸ் ஹாமில்டன் கடந்த நவம்பர் மாதம் சமன்செய்து அசத்தினார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் மோட்டார்ஸ்போர்ட் சேவைகளுக்கான நைட்ஹூட் பட்டம் லூயிஸ் ஹாமில்டனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவரது பெயருக்கு முன்னதாக ‘சர்’ என்ற அடைமொழி இணைக்கப்படும்.
லூயிஸ் ஹாமில்டனுக்கு 'நைட்ஹூட்' பட்டம் முன்னதாக ஃபார்முலா ஒன் வீரர்களான சர் ஜாக்கி ஸ்டீவர்ட், சர் ஸ்டிர்லிங் மோஸ், சர் பிராங்க் வில்லியம்ஸ், சர் பேட்ரிக் ஹெட், சர் ஜாக் பிரபாம் ஆகியோர் இந்த நைட் ஹூட் பட்டத்தைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘நான் நலமுடன் இருக்கிறேன்’ - முகமது அசாருதீன்