சர்வதேச கைப்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிருக்கான உலகக்கோப்பை கைப்பந்து போட்டி ஜப்பானில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் செர்பியா அணி அர்ஜெண்டினா அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செர்பியா அணி முதல் செட்டை 25- 15 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாது செட்டை அர்ஜெண்டினா அணி 25-23 என்ற கணக்கில் போராடி வென்றது. அதன் பின் சாமர்த்தியமாக விளையாடிய செர்பியா அணி மூன்று மற்றும் நான்காவது செட்டை 25-23, 25-23 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.