தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்த ஆண்டு மனநிறைவை தரவில்லை: அதிருப்தியில் ஆனந்த்!

மும்பை: 2019ஆம் ஆண்டு வெற்றி, தோல்வி அடிப்படையில் மனநிறைவை தராத ஆண்டாக அமைந்துவிட்டதாக செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

Viswanathan
Viswanathan

By

Published : Dec 20, 2019, 11:34 AM IST

கொல்கத்தாவில் நடைபெற்ற ’டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ்' செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இதுதொடர்பாக அவா் கூறுகையில், “2019 ஆண்டு போட்டி முடிவுகளின் அடிப்படையில், எனக்கு அதிருப்தியைதான் தந்தது. எனக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்தமாக இந்திய செஸ் வீரா்களுக்கும் ஏற்றத்தை தரவில்லை. சிறந்த வீரா்கள் இருந்தும், கேண்டிடேட் செஸ் போட்டிக்கு தேர்வு பெறவில்லை. கடைசி நேரத்தில் நானே தோல்விக்கு வழிவகுத்துக் கொண்டேன்.

பல போட்டிகளில் வெற்றியின் விளிம்பில் இருந்தேன். ஆனால் ஒழுங்கற்ற ஆட்டத்தால் அவற்றை தவறவிட்டேன். கிராண்ட் செஸ் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்திறனுடன் காணப்பட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் தோல்வியடைந்தேன்.

ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக பிளிட்ஸ், ரேபிட் செஸ் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை. நமது நாட்டின் 64ஆவது கிராண்ட் மாஸ்டரை விரைவில் எதிர்பார்க்கிறேன்” என்றாா்.

இதையும் படிங்க: நிறைவேறுமா மாற்றுத்திறனாளியின் செஸ் சாம்பியன் கனவு?

ABOUT THE AUTHOR

...view details