மேட்டியோ பெல்லிகோன் மல்யுத்தத் தொடர் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்றுவருகிறது. இதில் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் வின்ஷ் போகத், கனடாவின் டயானா வீக்கரை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத், எதிரணி வீரங்கனைக்கு வாய்ப்புத் தராமல் புள்ளிகளை தன்வசப்படுத்தினார். இதன் மூலம் வினேஷ் போகத் 4-0 என்ற புள்ளிக்கணக்கில் டயானா வீக்கரை வீழ்த்தி, மேட்டியோ பெல்லிகோன் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.