தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மலைமேல் ஃபார்முலா ஒன் காரை ஓட்டி அசத்திய வீரர்! - Formula one car race

வியன்னா: இளம் கார் பந்தய வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாபென், ஃபார்முலா ஒன் பந்தயக் காரை ஆஸ்திரியாவின் கிராஸ் மலைப்பகுதியில் ஓட்டியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

formula one car

By

Published : Jun 27, 2019, 3:17 PM IST

ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தில் உலகின் தலைசிறந்த வீரர்களும் பங்கேற்று ஃபார்முலா ஒன் பந்தயக் கார்களை அதிவேகமாக இயக்கி சாதனை படைப்பார்கள். இந்நிலையில், இந்த வருடம் இதுவரை எட்டு சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்பதாவது சுற்றுப்போட்டி ஆஸ்திரிய நாட்டின் கிராஸ் நகரில் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, ரெட் புல் அணியைச் சேர்ந்த இளம் பந்தய வீரரான மேக்ஸ் வெர்ஸ்டாபென் தனது ஃபார்முலா ஒன் காரை கிராஸ் நகரின் மலைப்பகுதியில் அசத்தலாக ஓட்டினார். அதிக திருப்பங்கள், மேடுகள் நிறைந்த மலைப்பகுதியில் மேக்ஸ், பந்தய காரை ஓட்டியது அங்கு கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

மலைமேல் ஃபார்முலா ஒன் காரை ஓட்டி அசத்திய வீரர்

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மேக்ஸ் நடப்பு சீசனில் 100 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details