அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் மகளிருக்கான தேசிய சாம்பியன்ஷிப் ஐஸ் ஹாக்கி தொடர் நடைபெறும். இந்தப் போட்டிகளுக்கான அணிகளை தேர்ந்தெடுப்பதற்காக ஏப்ரல்,மே மாதத்தில் எட்டு இடங்களில் உயர் ஆட்டத்திறன் பயிற்சி போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அமெரிக்காவில் மகளிர் ஐஸ் ஹாக்கி பயிற்சி போட்டிகள் ரத்து! - மகளிர் ஐஸ் ஹாக்கி
கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் நடைபெறவிருந்த மகளிருக்கான ஐஸ் ஹாக்கி உயர் ஆட்டத்திறன் பயிற்சி போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
USA Hockey cancels women's 2020 High-Performance Centres
இச்சூழலில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற இருந்த நடப்பு ஆண்டுக்கான மகளிர் ஆட்டத்திறன் பயிற்சி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஐஸ் ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.