#PKL2019: இந்தியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி யூபி யோதா அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யூபி யோதா அணி முதல் பாதி முடிவில் 20-17 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன் பின் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு புல்ஸ் அணி எதிரணியின் டிஃபென்ஸை பதம் பார்த்தது. இதனால் இவ்விரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இறுதியில் பெங்களூரு புல்ஸ் அணி 48-45 என்ற கணக்கில் யூபி யோதா அணியை வீழ்த்தில் புரோ கபடி லீக்கின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.