1.91 கிலோமீட்டர் (1.18 மைல்) வென்டூக்ஸ் என்பது ஒரு திகைப்பூட்டும் மலையேற்றம் ஆகும். சைக்கிள் போட்டியின் இறுதியில் எல்லைக்கோட்டை தொடும்போது அந்த நிலப்பகுதி நிலாவின் நிலப்பரப்பைப் போல் இருக்கும்.
மொத்தம் உள்ள 21 சுற்றுகளில் 11ஆவது சுற்றில் இருந்து, ரைடர்கள் வென்டூக்ஸை இரண்டு வெவ்வேறு நுழைவு புள்ளிகளிலிருந்து தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த சைக்கிள் ரேசின் இயக்குநர் கிறிஸ்டியன் ப்ருதோம் கூறுகையில், "டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் கால்பந்தாட்ட ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றுடன் தேதிகள் ஒத்துப்போகக் கூடாது என்பதற்காக ஜூன் 26 முதல் ஜூலை 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாகவே இம்முறை தொடங்கவுள்ளோம்.