2020ஆம் ஆண்டு தொடக்கம் முதல் பல உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கி ஜப்பான், மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்டு பல உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் நடைபெறயிருந்த விளையாட்டுப் போட்டிகள் தேதி மாற்றம் செய்யப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன. அந்தவகையில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரும் தடை செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கட்சுனோபு கடோ விளக்கமளித்துள்ளார்.