தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்- தீபிகா குமாரி அசத்தல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பெண்கள் தனிநபர் வில்வித்தை பிரிவு பட்டியலில் 9ஆவது இடத்துக்கு முன்னேறினார்.

Deepika Kumari
Deepika Kumari

By

Published : Jul 23, 2021, 11:32 AM IST

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 23) தொடங்கி நடந்துவருகின்றன.

இதில் பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் சுற்றில் தென் கொரிய வீராங்கனைகளான ஆன் சான், ஜாங் மின்ஹீ மற்றும் காங் சாயோங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எனினும் அடுத்த ரவுண்டில் தீபிகா துல்லியமாக விளையாடி ஸ்கோர் செய்தார்.

இந்நிலையில் தீபிகா குமாரிக்கு முதல் பாதியில் 334 புள்ளிகள் கிடைத்தன. அடுத்த பகுதியில் துல்லிய தாக்குதலுடன் முன்னேறி 663 புள்ளிகளை பெற்று பட்டியல் தரவரிசையில் 9ஆவது இடத்துக்கு முன்னேறினார். அதாவது X-10-9-9-9-7 புள்ளிகள் பெற்றார்.

மொத்தம் 72 முறை அம்பு எய்தனர். இதில் தீபா 36 முறை மிக துல்லிய தாக்குதல் தொடுத்தார். இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டிகளில் மொத்தம் 128 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் 64 பேர் ஆண்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க : பெர்லின் ஒலிம்பிக்: இது ஹிட்லர் காலத்தின் நினைவு ஓட்டம்

ABOUT THE AUTHOR

...view details