சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில், 32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ஒலிம்பிக் வீரர்களுக்காக தயாராகும் பிரத்யேக இகோ பிரெண்ட்லி மெத்தைகள்!
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்கும் வீரர்களின் உடல் நலத்தை பாதிக்காத வகையில் பிரத்யேக மெத்தைகளை தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.
Tokyo 2020
இந்த ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் தடகள வீரர்கள் தங்குவதற்கான கிராமம் டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வீரர்கள் நன்கு தூங்குவதற்காகவும், உடல் நலத்தை பாதிக்காதுவாறு இகோ ஃபிரெண்ட்லி மெத்தைகளை ஜப்பானின் பிரபலமான மெத்தைகள் தயாரிப்பு நிறுவனமானஏர்வீவ் (Airweave) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
- இந்த மெத்தைகள் இலகுரக அட்டைப் பெட்டியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவை ஒலிம்பிக் போட்டி முடிந்தப் பிறகு காகித தயாரிப்புகளுக்காக மறுசுழற்சி செய்யப்படும்.
- மெத்தைகளுக்குள் இருக்கும் பஞ்சுகள் மறுசுழற்சியின் படி புதிய பிளாஸ்டிக் பொருட்களாக பயன்படுத்த முடியும்.
- ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் உடலுக்கு ஏற்றவாறு இந்த மெத்தைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில், மென்மை, கடினமான மற்றும் சூப்பர் கடினம் (Soft, hard, Super hard) ஆகிய பிரிவுகளில் மெத்தைகள் இருக்கும்.
- இந்த ஒலிம்பிற்காக சுமார் 18,000-க்கும் மேற்பட்ட மெத்தைகளை ஏர்வீவ் நிறுவனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
TAGGED:
Tokyo Olympics