இதுகுறித்து ஈ டிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'குடும்பத்தினரும், பயிற்சியாளர்களும் கொடுத்த ஊக்கமே நான் தங்கம் வென்றதற்கு மிகப்பெரும் காரணம். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விளையாட்டில் ஆர்வம் செலுத்தும் மகளிருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு.
'தங்கமங்கை' அனுராதாவின் பிரத்யேக பேட்டி!
புதுக்கோட்டை: தென்மாவட்டங்களுக்கு என தனி பயிற்சியாளர் நியமிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன் வெல்த் பளுதூக்கும் போட்டியில் மகளிருக்கான 87 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்ற அனுராதா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நான் பங்கேற்ற முதல் சர்வதேச தொடரிலேயே தங்கம் வென்றது மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த நடைபெறவுள்ள தொடர்களுக்கு சிறப்பாக பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன்.
மேலும், பளுதூக்கும் போட்டி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கும், பயிற்சி மேற்கொள்ளவும் எந்த கருவிகளும் இல்லாமல் உள்ளது. அதிக மாவட்டங்களில் பயிற்சியாளர்கள் இல்லாமல் உள்ளனர். முக்கியமாக தென் மாவட்டங்களில் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். அதனை நிறைவேற்றினால் என்னைப்போல் பல வீராங்கனைகாளும், வீரர்களும் வருவார்கள்' என்றார்.