1990 நவம்பர் 22ஆம் தேதி சர்வைவர் சீரிஸ் மூலம் ரெஸ்லிங் விளையாட்டுக்கு அண்டர்டேக்கர் அறிமுகமானார். அவர் இதில் பங்கேற்று சரியாக 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதே தேதியில் தனது கடைசி போட்டியை விளையாடியுள்ளார்.
WWE Universe: கடைசி போட்டியில் பங்கேற்றார் ‘தி அண்டர்டேக்கர்’ - WWE
உலகப் புகழ்பெற்ற ரெஸ்லிங் வீரர் ‘தி அண்டர்டேக்கர்’ தனது கடைசி போட்டியில் நேற்று விளையாடினார். ரெஸ்லிங் விளையாட்டில் அவர் பங்களிப்பை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேன் மேக்மோன், பிக் ஷோ, ஜேபிஎல், ஜெஃப் ஹார்டி, மிக் ஃபோலி, தி காட்பாதர், கெவின், ட்ரிபிள் ஹெச், கேன் உள்ளிட்ட பலரும் அண்டர்டேக்கரை வாழ்த்தினர். அண்டர்டேக்கர் கடைசியாக ரெஸில் மேனியா 36 போட்டியில் ஏஜே ஸ்டைல்ஸ் என்பவருடன் மோதி வெற்றி கண்டார்.
ரெஸ்லிங் வாழ்க்கை குறித்து பேட்டியளித்த அண்டர்டேக்கர், எனது ரெஸ்லிங் பயணத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். உலகம் முழுவதும் பல்வேறு ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். எனது காலத்தில் வாழ்ந்த அத்தனை வீரர்களுடனும் போட்டியிட்டிருக்கிறேன். என்னுடைய இந்த பயணத்தை திரும்பிப் பார்க்கையில், நான் எதையும் இழந்ததாக கருதவில்லை. ரசிகர்களின் அதீத அன்பை பெற்றிருக்கிறேன் என தெரிவித்தார்.