தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#FIVBWorldcup: 'அடின்னா...அடி என்ன அடி' - அதிரடியாக வென்ற நெதர்லாந்து! - The Netherlands on the Victory Tour

டொயமா: மகளிர் உலகக்கோப்பை கைப்பந்துத் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 3:1 என்ற செட்கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தியது.

#FIVBWorldcup

By

Published : Sep 23, 2019, 1:28 PM IST

Updated : Sep 23, 2019, 1:38 PM IST

2019ஆம் ஆண்டிற்கான மகளிர் உலகக்கோப்பைக் கைப்பந்துத் தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஏழாவது லீக் சுற்றில் நெதர்லாந்து அணி தென் கொரிய அணியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய நெதர்லாந்து அணி 25-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் செட்டைக் கைப்பற்றியது. அதன்பின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் காட்டிய தென் கொரிய அணி இரண்டாவது செட் கணக்கை 25-21 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி நெதர்லாந்திற்கு அதிர்ச்சியளித்தது.

அதன்பின்னர் தனது வெறித்தனமான ஆட்டத்தை காண்பித்த நெதர்லாந்து அணி மூன்றாவது, நான்காவது செட்கணக்குகளை 25-22, 25-23 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.

இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பை கைப்பந்துத் தொடரின் ஏழாவது சுற்றில் நெதர்லாந்து அணி 3:1 என்ற அடிப்படையில் தென் கொரிய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பைக் கைப்பந்துத் தொடரில் நெதர்லாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி, ஐந்து போட்டிகளில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் சந்தித்து 16 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க:

#FIVBWorldCup: அர்ஜென்டினாவை வீழ்த்தியது தென் கொரியா!

Last Updated : Sep 23, 2019, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details