சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த ஜாம்பவான் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில், ’இத்தனை காலம் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் லண்டனில் நடைபெறும் ஏடிபி தொடர் - லேவர் கோப்பை தனது இறுதி தொடராக இருக்கும் என அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ரோஜர் பெடரர் 8 முறை விம்பிள்டன் , 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் , 5 முறை அமெரிக்க ஓபன் , 1 முறை பிரெஞ்ச் ஓபன் என 20 கிராண்ட்ஸ் ஸ்டாம் பட்டங்களை வென்றவர்.