அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வந்தன.
இதில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜஸ்வினி கலந்து கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் 1171 புள்ளிகளைப் பெற்று தகுதிச்சுற்றில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு 12ஆவது ஆளாக தகுதி பெற்று அசத்தியுள்ளார். மேலும் இந்த போட்டியில் 1178 புள்ளிகளைப் பெற்ற சீனாவின் ஷி மெங்யாவொ முதலிடம் பிடித்தார்.