தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வில் அம்பு எய்து டாக்டர் பட்டம் பெற்ற 5 வயது சிறுமி! - வில் அம்பு

சென்னை: ஐந்து வயதேயான சிறுமி சஞ்சனா, வில் அம்பு போட்டியில் சாதனை படைத்து டாக்டர் பட்டம் பெற்று சென்னை திரும்பியுள்ளார்.

bow arrow
bow arrow

By

Published : Feb 7, 2020, 1:14 PM IST

சென்னையைச் சேர்ந்தவர் பிரேம்நாத், இவரது 5 வயது மகள் சஞ்சனா, ’வில் அம்பு’ எய்து மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக மும்பையில் சிறுமி சஞ்சனாவை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் பட்டம் பெற்றபின் மும்பையிலிருந்து இன்று தாயகம் திரும்பிய வில் அம்பு வீராங்கணை சஞ்சனா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டாக்டர் பட்டம் கொடுத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார். பின்னர், பெற்றோர்களுக்கு செல்ல அறிவுரை வழங்கிய குட்டி வீராங்கணை, தொலைக்காட்சியைப் பார்த்து குழந்தைகளை எதையும் செய்ய சொல்லாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ, அதில் அவர்களை மேம்படுத்த பெற்றோர் உதவ வேண்டுமென்றும் சஞ்சனா கூறினார். இந்த விருதை பெண் குழந்தைகளுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறிய அவர், பெண்ணாக பிறந்தாளே அவர்கள் சாதனையாளர்தான் என்றும், பெண்கள் விட்டுக் கொடுப்பவர்கள், தோற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

வில் அம்பு எய்து டாக்டர் பட்டம் பெற்ற 5 வயது சிறுமி!

சிறுமி சஞ்சனாவின் தந்தை பிரேம்நாத் பேசும்போது, வில் அம்பு போட்டியில் சாதனை படைத்ததற்காக அசாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் டாக்டர் பட்டம் சஞ்சனாவிற்கு வழங்கப்பட்டது. சிறு வயதிலேயே என் மகள் விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையும் படிங்க: அதிக தோல்விகளில் முதலிடம் பிடித்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details