தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கடைசி வாய்ப்பில் வெண்கலத்தை தங்கமாக மாற்றிய தமிழ்நாடு வீரர்! - Saran won Gold

கவுகாத்தி: கேலோ இந்தியா யூத் கேம்ஸ் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் கிடைக்கவிருந்த  நிலையில், கடைசி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தங்கப்பதக்கத்தை தமிழ்நாடு வீரர் சரண் கைப்பற்றினார்.

TAMIL NADUS SARAN CONVERTS BRONZE INTO GOLD WITH FINAL JUMP
TAMIL NADUS SARAN CONVERTS BRONZE INTO GOLD WITH FINAL JUMP

By

Published : Jan 14, 2020, 8:43 AM IST

மத்திய அரசால் நடத்தப்படும் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதன் நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு வீரர் சரண் பங்கேற்றார். இதில் கொடுக்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பில் 7.11 மீ தாண்டிய சரண், ஹரியானா, கேரள வீரர்களுக்குப் பின்வந்தார். இதையடுத்து ஆடிய நான்கு சுற்றுகளிலும் ஹரியானா வீரர் பூபேந்தர் சிங், கேரள வீரர் சஜன் ஆகியோர் முன்னிலையிலே இருந்தனர்.

வெண்கலப்பதக்கம் கிடைக்கவிருந்த சரண் கடைசி வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி, 7.41 மீ தாண்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதனால் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

தமிழ்நாடு வீரர் சரண்

இது குறித்து சரண் பேசுகையில், ''தொடக்க வாய்ப்பை சரியாகப் பய்னபடுத்தவில்லை. அதையடுத்து இரண்டாவது வாய்ப்பில் 7.11 மீ தாண்டியது சிறிது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த நான்கு வாய்ப்புகள் எனக்குச் சரியாக நடக்கவில்லை. இறுதியாக கடைசி வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினேன். தமிழ்நாட்டிற்காக தங்கப்பதக்கம் கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

இதையும் படிங்க: கேலோ இந்தியா யூத் கேம்ஸ்: 5ஆம் இடம்பிடித்த தமிழ்நாடு

ABOUT THE AUTHOR

...view details