தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Asian Games 2023: ட்ரிப்பிள் ஜம்பில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கலம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ட்ரிப்பிள் ஜம்ப் (triple jump) போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

praveen-chitravel
praveen-chitravel

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 11:05 PM IST

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனா ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பலர் பதக்கங்களை வென்று வரும் நிலையில், ட்ரிப்பிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இவர் 16.68 மீட்டர் தூரத்திற்கு தாண்டி 3-வது இடம் பிடித்து இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை வென்று தந்துள்ளார். இந்த போட்டியில் சீன நாட்டை சேர்ந்த யாமிங் சூ மற்றும் யாக்கிங் ஃபாங் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்தனர். இதில் யாமிங் சூ 17 மீட்டரும், யாக்கிங் ஃபாங் 16.93 மீட்டரும் தாண்டி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

மேலும், நான்காவது இடத்தை பிடித்த அபுபக்கர் 16.62 மீட்டர் தாண்டினார். வெறும் 0.06 மீட்டர் தூரத்தில் அவர் வெண்கலப் பதக்கத்தை நழுவ விட்டார். ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா 14 தங்கம், 24 வெள்ளி, மற்றும் 26 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.

இதேபோல் மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 15:14.75 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் பதக்கம் வென்றார். அதே நேரம் ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரரான முகமது அப்சல் 1:48.43 விநாடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Asian Games 2023: தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்..!

ABOUT THE AUTHOR

...view details