தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆகியோருக்கு அர்ஜுனா விருது! - arjuna awards 2023 list
National sports awards 2023: விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்டோருக்கும், துரோணாச்சார்யா விருது தமிழ்நாட்டை சேர்ந்த கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த முகமது ஷமி சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 24 விக்கெட்கள் கைப்பற்றி சாதனை படைத்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஜாகீர் கான் சாதனையை முறியடித்தார்.
இதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கும் அர்ஜுன விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைஷாலி சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். அதே போல் 2023ஆம் ஆண்டில் சிறந்த விளையாட்டு பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மல்லகாம்ப் என்னும் பாரம்பரிய உடல் வித்தை விளையாட்டுற்காக கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இந்திய அளவில் பல்வேறு விதமான விளையாட்டுகளில் சாதனை புரிந்த 26 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் பட்டியல்