டோக்கியோ: கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக தடகள வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமோ வீரர் ஹகுஹோவுக்கு கரோனா உறுதி - Japanese athlete
சுமோ வீரர் ஹகுஹோவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என ஜப்பானிய சுமோ வீரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சுமோ வீரர் ஹகுஹோவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என ஜப்பானிய சுமோ வீரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஹகுஹோவுக்கு வாசனை தெரியாத காரணத்தால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவரது சக வீரர்கள், தோழர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவில் நடைபெறும் போட்டிக்காக பயிற்சியை மேற்கொண்டிருந்த ஹகுஹோவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.