தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கைப் பயணம்! - Indian Boxing

ஒரே ஒரு பதக்கத்தின் மூலம் இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் 2012ஆம் ஆண்டில் ஒரு பெண்ணின் பெயர் சென்று சேர்ந்தது. அதுவரை பெண்களுக்கான குத்துச்சண்டையை பார்த்திடாத கண்கள் அனைத்தும் அவரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்துபோயின. அந்த ஆட்டத்தின் இறுதியில் 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் படைத்தார். அந்த பெண்ணின் பெயர் எம்சி மேரி கோம்.

Story on MC Mary Kom
Story on MC Mary Kom

By

Published : Mar 2, 2020, 10:56 PM IST

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைப் பயணங்கள் ரசிகர்ளுக்கு மனப்பாடம். ஒருமுறை லைம்லைட்டிற்கு வந்துவிட்டால் கிரிக்கெட்டர்களுக்கு பெயர், புகழ் என வாழ்வில் அனைத்தும் கிடைத்துவிடும். ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் முழுப்பெயர் கூட சாமானியர்களுக்கு தெரிவதில்லை. இந்தியாவில் எழுத்தாளர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ஒரே நிலைதான்.

ஆனால் ஒரே ஒரு பதக்கத்தின் மூலம் இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் 2012ஆம் ஆண்டில் ஒரு பெண்ணின் பெயர் சென்று சேர்ந்தது. அதுவரை பெண்களுக்கான குத்துச்சண்டையை பார்த்திடாத கண்கள் அனைத்தும் அவரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்துபோயின. அந்த ஆட்டத்தின் இறுதியில் 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் படைத்தார். அந்த பெண்ணின் பெயர் எம்சி மேரி கோம்.

எம்சி மேரி கோம்

தன் கனவை நனவாக்குவதற்காக வீட்டை விட்டுப் போன ஒரு சிறுமி என்னவாக ஆவாள், அவள் எப்படி சண்டை செய்வாள், வாழ்க்கைப் பிரச்னைகளோடும் போராட்டங்களோடும் அதேவேளை போட்டியிலும் மல்லுக்கட்டும்போது அவளுக்கு என்ன மாதிரி உணர்வு இருக்கும் என ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். மனைவியாக தன் கணவனுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் துணையாக இருப்பது மட்டுமின்றி, ஒரு தாயாக குத்துச்சண்டையில் மூவர்ண அடையாளத்துடன் ஆதிக்கம் செலுத்துவதுமாக, இந்த நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேரின் இலட்சிய மனிதராக இருக்கிறார், மேரி கோம்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த மேரி கோம், அங்குள்ள சுர்சந்த்பூர் மாவட்டத்தில் 1983 மார்ச் 1 ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர், விவசாயிகள். கோமின் இயற்பெயர், மங்டே சுக்னிசுங் மேரி கோம் ஆகும். அவருடைய ரசிர்கள் அவரை எம்சி மேரி கோம் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மேரி கோம், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்விலும் போராட்டங்களையும் பெரும் பாதிப்புகளையும் எதிர்கொண்டுதான் இந்த நிலையை எட்டியிருக்கிறார்.

எம்சி மேரி கோம்
போராட்டங்களை வெற்றியாக்கியவர்

குழந்தையாக இருந்த மேரி கோம், தன் தாய், தந்தையுடன் தோட்டத்துக்குச் செல்வதும் அதில் அவர்களுக்கு உதவுவதுமாக வளர்ந்தார். சிறு வயதில் அவருடைய முன்மாதிரியான டிங்கோ சிங்கைப் பார்த்து குத்துச்சண்டை வீரராக வரவேண்டும் என மனதில் ஆசை எழ, நினைத்ததை சாதித்துக்காட்டினார். படிப்பைப் பொறுத்தவரை கோம் எப்போதும் முதல் நிலையில் வந்ததில்லை; ஆனால் விளையாட்டில் ரொம்பவும் ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார்.

37 வயதாகும்போது அவர் குத்துச்சண்டையில் முதல்நிலைக்கு வந்தார்; ஒரு பக்கம் குடும்பத்தினரின் புறக்கணிப்பையும் இன்னொரு புறம் பணப் பிரச்னையின் உச்சமான பாதிப்பையும் எதிர்கொண்டிருந்த நிலையில், தன்னாலும் இந்த நிலையை எட்டமுடியும் என்பதை அவரால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. 15 வயதில் பலமான தலைக்கவசத்துடனும் கையுறைகளுடனும் தன் விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கியவருக்கு, கடைசியில் குடும்பமும் ஆதரவாகி, அவருடைய நோக்கங்களை ஏற்றுக்கொண்டது. 2001-ல் அவருடைய சர்வதேச விளையாட்டுப் பயணம் தொடங்கியது.

எம்சி மேரி கோம்

இதையும் படிங்க:ஹாக்கி பிதாமகன் தயான் சந்த்தை மறந்த இந்தியா!

ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணுக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருப்பான் என்பது பொதுவானது. மேரிகோமுக்கு பிரபல கால்பந்து ஆட்டக்காரரான அவருடைய கணவர் ஆன்லர் அப்படியாக வாய்த்தார். கோமுக்கு துணையாக இருப்பது மட்டுமின்றி அதீதமான திறம்படவும் அவர் விளங்கினார். 2005-ல் கோம்- ஆன்லர் திருமணம் நடைபெற்றது. இதனால் கோமின் பயிற்சியாளர்கள் மனத்தாங்கல் அடைந்தனர். காரணம், திருமணத்துக்குப் பிறகு கோம் குத்துச்சண்டையைக் கைவிட்டுவிடுவார் என அவர்கள் கருதிக்கொண்டதுதான். ஆனால் காலம் அதை மாற்றி கோமின் பிரச்னைக்குத் தீர்வு கண்டது. அது அந்த உலகத்தின் போக்கை மாற்றியமைத்தது.

வெற்றியை ஈட்டிய களங்கள்

37 வயதாகும் மேரி கோம், பத்ம விபூசன் விருது பெற்றுள்ள முதல் பெண் விளையாட்டுக்காரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். மட்டுமல்ல, இவ்விருதைப் பெறும் நான்காவது விளையாட்டு வீரர் என்பதும் அவருக்குக் கிடைத்துள்ள பெருமை ஆகும். அவருக்கு முன்னர் சதுரங்க விளையாட்டின் கிராண்ட்மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த்(2007), கிரிக்கெட் உலகின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கர் (2008), எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டதில் சாதனைபுரிந்த பிரபல மலையேறும் வீரர் சர் எட்மண்ட் கிலாரி(2008) ஆகியோர் பத்ம விபூசன் விருதைப் பெற்றுள்ளனர். எட்மண்ட் கிலாரி, டெண்டுல்கருடன் இவ்விருதைப் பகிர்ந்துகொண்டார். பிறகு 2014-ல் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா விருது கிடைத்தது வாசகர்கள் நன்கறிந்ததே!

எம்சி மேரி கோம்
கௌரவங்களால் ஆன வாழ்க்கை

* தாயாக இருந்துகொண்டே எட்டு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள (ஆடவர், மகளிர்) முதல் குத்துச்சண்டை வீரர் மேரி கோம்.
* 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தகுதிபெற்ற முதல் பெண், இவர். பிறகு அப்போட்டியில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை நாட்டுக்கு பெற்றுத் தந்தார்.
* உலக சாம்பியன்ஷிப் போட்டியில் எட்டு முறை தங்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.
* ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையும் ஆவார். தென்கொரியாவில் 2014-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலேயே அவர் இப்பதக்கத்தை வென்றார்.
* காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியரும் இவரே.
* ஆசிய அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரே பெண் குத்துச்சண்டை வீரரும் இவரே.

இதையும் படிங்க:கடமை தவறாத கால்பந்து வீரர் விஜயனின் பிறந்தநாள்!

ABOUT THE AUTHOR

...view details